இன்போசிஸ் மீது மோசடி குற்றச்சாட்டு: 238 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இன்போசிஸ் விசா மோசடி
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், அமெரிக்காவில் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, நிறுவனத்திற்கு 238 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய H-1B தொழில் விசாக்களுக்கு பதிலாக, B-1 பார்வையாளர் விசாக்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
B-1 விசாக்கள் பொதுவாக குறுகிய கால பயணங்களுக்காக வழங்கப்படுபவை. ஆனால், இன்போசிஸ் இந்த விசாக்களை தனது ஊழியர்களை நீண்ட காலமாக அமெரிக்காவில் பணி புரிய வைக்க பயன்படுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கான நலன்களை குறைக்க முயற்சி
இந்த செயல்பாட்டின் மூலம், இன்போசிஸ் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம் மற்றும் பிற நலன்களை குறைக்க முயற்சி செய்திருக்கிறது.
இது மேலும், அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்களை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், பெரிய நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக ஊழியர்களின் உரிமைகளை எவ்வாறு மீறுகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |