போர் நிறுத்தத்திற்கு மத்தியில் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே மீண்டும் பதற்றம்
கடந்த வாரம் இரண்டு படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள மவுண்ட் டோவ் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Israel-Hezbollah ceasefire on the verge of collapse
— NEXTA (@nexta_tv) December 2, 2024
On Monday, Hezbollah shelled Mount Dov, a western spur of the Hermon. The target was apparently IDF positions on Mount Dov. It was the militant group's first attack since a truce with Israel went into effect last week, after… pic.twitter.com/kWPUX6jAbS
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹிஸ்புல்லாவின இந்த செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். இதற்கு இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும்' என எச்சரித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்க பாதுகாப்புத்துறை (பென்டகன்), 'இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது' என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |