33 வயதில் 3வது டெஸ்டில் முதல் சதம்: வங்காளதேசத்தை புரட்டியெடுத்த வீரர்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இன்னொசென்ட் கையா முதல் சதம் விளாசினார்.
இன்னொசென்ட் கையா
ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.

வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. மொமினுல் ஹயூ 60 (81) ஓட்டங்கள் எடுத்தார்.
நியூமேன் நியமயூரி 4 விக்கெட்டுகளும், ரிச்சர்ட் ங்கரவா, முஸரபாணி மற்றும் பிராட் எவன்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 42 ஓட்டங்களும், டெய்லர் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

33 வயதில்
தொடக்க வீரர் இன்னொசென்ட் கையா (Innocent Kaia) தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்டினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரையன் பென்னெட் (Brian Bennett) 67 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசினார்.
வங்காளதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய கையா (33 வயது) சதம் விளாசினார். 3வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதம் ஆகும்.
அணியின் ஸ்கோர் 279 ஆக உயர்ந்தபோது, கையா 140 ஓட்டங்கள் (17 பவுண்டரிகள்) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |