பழைய செல்போன்களை விற்று கோடிகள் வருமானம்! சாதனை கதை
பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர் நீரஜ் சோப்ராவின் தாத்தா. குடும்ப சூழல் காரணமாக காய்கறி வியாபாரியான தந்தை. நீரஜ் சோப்ராவின் கதை உத்வேகம் தரக் கூடியது.
உழைப்பை மட்டுமே நம்பி
அவரது மறைந்த தந்தை அவரை ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று விரும்பினார். உழைப்பை மட்டுமே நம்பிய நீரஜ் சோப்ரா Zobox என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவரது நிறுவனம் பழைய, புதுப்பிக்கப்பட்ட மொபைல் போன்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
தமது நிறுவனத்தின் செயல்பாடு குறித்து விளக்கிய நீரஜ் சோப்ரா, பலர் தங்கள் பழைய அலைபேசிகளை புதிய அலைபேசி வாங்குவதற்காக ஈ-காமர்ஸ் இணையதளங்களில் பரிமாற்றிக் கொள்கிறார்கள்.
தங்களது நிறுவனம் இந்த அலைபேசிகளை ரிப்பேர் செய்து புதுப்பிக்கிறது. பின்னர் இந்த அலைபேசிகளை வாரண்டியுடன் சந்தையில் விற்பதாக தெரிவித்துள்ளார்.
நிறுவனம் மூடப்படும் நிலை
நாட்டின் பெருநகர மக்களை அல்ல கிராமப்புற மக்களின் தேவைகளையே தங்கள் நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 50 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக கூறும் அவர்,
2015ல் தமது நிறுவனத்தை தொடங்கிய பின்னர் பண மதிப்பிழப்பு, அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் முந்தைய நிறுவனம் மூடப்படும் நிலைக்கு சென்றதாகவும், ஆனால் பழைய அலைபேசி விற்பனையை துவங்கிய பின்னர் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |