இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லை உடனே மாற்றுங்கள்: மின்னஞ்சல் தொடர்பில் மெட்டா விளக்கம்
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வந்த பாஸ்வேர்ட் ரீசெட் குறித்த மின்னஞ்சல்கள் குறித்த விளக்கத்தை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வந்த மின்னஞ்சல்கள்
சமீபத்தில் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்களின் மின்னல்களுக்கு அவர்களின் கடவுச்சொல்லை மாற்றியமைக்குமாறு(Password Reset) செய்திகள் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
We fixed an issue that let an external party request password reset emails for some people. There was no breach of our systems and your Instagram accounts are secure.
— Instagram (@instagram) January 11, 2026
You can ignore those emails — sorry for any confusion.
மேலும் தங்களின் கோரிக்கை எதுவும் இல்லாமல் தானாக வந்த இந்த வேண்டுகோளை தொடர்ந்து, இணையதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் குறித்த விளக்கத்தை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா வழங்கியுள்ளது.
அதில், பயனர்களுக்கு வந்த மின்னஞ்சல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வந்து இருப்பதாகவும், பயனர்களின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் விளக்கம்
X தளத்தில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில், பயனர்களுக்கான கடவுச்சொல் மாற்றம் தொடர்பான மின்னஞ்சல் கோரும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது.
எங்கள் தரவுகள் பாதுகாப்பில் எந்தவொரு அத்துமீறிய ஊடுருவலும் நடைபெறவில்லை, பயனர்களின் அனைத்து கணக்குகளும் பாதுகாப்பாக உள்ளது, பயனர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துவதாகவும், கடவுச்சொல் தொடர்பான மின்னஞ்சல் ஏதேனும் வந்தால் அவற்றை பயணிகள் புறக்கணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |