இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை! பதின்வயது கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடு
பதின்வயது பயனர்களின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மெட்டாவின் புதிய கட்டுப்பாடு
இளம் பயனர்களின் ஆன்லைன் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் ஒரு அதிரடி புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட பதின்வயதினர் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இந்த புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
பெற்றோர்களின் ஒப்புதல்
இதன்படி, பதின்ம வயதினரின் கணக்குகளின் சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் நேரலை ஒளிபரப்புகளைத் தொடங்க முடியாது.
அதுமட்டுமின்றி, நேரடி செய்திகளில் சாத்தியமான ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் (Blur) வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும்.
சமூக ஊடக தளங்களின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளைத் தணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மெட்டா கடந்த செப்டம்பரில் இன்ஸ்டாகிராமிற்கான பதின்ம வயதினரின் கணக்குகளுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
உலகளவில் சுமார் 54 மில்லியன் பதின்வயதினர் ஏற்கனவே இந்த டீன் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமல்படுத்தப்படும்.
விரைவில், இந்த டீன் கணக்குகள் அமைப்பு பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |