Instant Bun Dosa: பஞ்சு போல பன் தோசை.., 15 நிமிடத்தில் செய்யலாம்

Healthy Food Recipes
By Yashini Aug 22, 2024 07:50 AM GMT
Report

பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.

தோசைக்கு மா அரைத்து அதனை புளிக்கவைத்து செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

அந்தவகையில், மா அரைக்காமலேயே 15 நிமிடத்தில் உடனடி பன் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

Instant Bun Dosa: பஞ்சு போல பன் தோசை.., 15 நிமிடத்தில் செய்யலாம் | Instant Bun Dosa Recipe In Tamil

வழுக்கையிலும் முடி வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்

வழுக்கையிலும் முடி வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்


தேவையான பொருட்கள்

  • ரவை- 1 கப்
  • தயிர்- ¾ கப்
  • எண்ணெய்- 3 ஸ்பூன்
  • கடலை பருப்பு- 1 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • வெங்காயம்- 1
  • பச்சைமிளகாய்- 2
  • கறிவேப்பிலை- 2 கொத்து
  • பெருங்காயம்- ¼ ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி- 1 கைப்பிடி
  • அரிசி மா- 1 ஸ்பூன்
  • சோடா உப்பு- 1 சிட்டிகை
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, புளித்த தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கடலை பருப்பு, சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

தித்திக்கும் சுவையில் கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி?

தித்திக்கும் சுவையில் கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி?

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் இதில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறி இதனை கரைத்து வைத்த மாவில் சேர்த்து கிளறவும்.

Instant Bun Dosa: பஞ்சு போல பன் தோசை.., 15 நிமிடத்தில் செய்யலாம் | Instant Bun Dosa Recipe In Tamil  

இறுதியை கரைத்த மாவில் அரிசி மா மற்றும் சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கரைத்த மா சேர்க்கவும்.

பின் தோசையை முன் பின் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் சுவையான பன் தோசை தயார்.      

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US