Instant chapati: மா பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் சப்பாத்தி செய்யலாம்
இன்றைய காலகட்டத்தில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. பெரும்பாலும் இரவு உணவு சப்பாத்தியாக இருக்கிறது.
ஆனால் இதற்காக மா பிசைந்து உருட்டி அதனை தேய்த்து சுட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
அந்தவகையில், மா பிசையாமலேயே 10 நிமிடத்தில் மென்மையான சப்பாத்தி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா- 2 கப்
- உப்பு- ½ ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, உப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மா போல் கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கரைத்த மாவை தோசை போல் ஊற்றவும்.
மா ஒரு பக்கம் வெந்து வந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு அதன் மேல் துணி வைத்து அழுத்தம் கொடுத்து வேகவைக்கவும்.
இப்படி அழுத்தம் கொடுத்து வேகவைப்பதால் சப்பாத்தி நன்கு மென்மையாக உப்பி வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |