Instant Idli: ஒரு கப் பொரி இருந்தால் போதும்.., பஞ்சுபோல இட்லி செய்யலாம்
பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும்.
இட்லி, தோசையை செய்வது சுலபம் தான், ஆனால் அதற்கு மாவு தயார் செய்வது தான் கடினமானதாகும்.
அந்தவகையில், பொரி வைத்து சுவையான பஞ்சுபோல இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொரி- 2 கப்
- ரவை- 1 கப்
- தயிர்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- ஈனோ- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொரி சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் ரவை சேர்த்து அதையும் நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் தயிர் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு போல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் ஈனோ அதனைடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் நன்கு பொங்கி வரும்.
பின்னர் மாவை நன்கு கலந்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோல இட்லி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |