உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் மாவு.., எப்படி தயாரிப்பது?
பெண்களுக்கு பொதுவாக முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.
அந்தவகையில், உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் நலங்கு மாவு வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கஸ்தூரி மஞ்சள் - 300g
- பூலாங்கிழங்கு- 150g
- ரோஜா பூ - 100g
- பச்சரிசி- 150g
- ஆவாரம் பூ- 100g
- கோரங்கிழங்கு - 50g
- கல்பாசி - 50g
- அதிமதுரம் - 100g
- பச்சிலை - 100g
- மரிக்கொழுந்து - 100g
- திருமஞ்சணபட்டை - 150g
- பாசிப்பயறு - 50g
- கடலைப் பருப்பு - 100g
- வேப்பிலை - 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை
முதலில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்தால் போதும் நலங்கு மாவு ரெடி.
இந்த நலங்கு மாவு பொடியை சிறிதளவு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.
இதை முகத்தில் தடவி சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னதாக முகத்தைக் குளிரந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.
இந்த நலங்கு மாவை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் நன்கு பொலிவாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |