Instant Uttappam: மா அரைக்க தேவையில்லை.., 10 நிமிடத்தில் ஊத்தப்பம் செய்யலாம்
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, ஊத்தப்பம், இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக நடைமுறையில் உள்ளது.
அந்தவகையில், 10 நிமிடத்தில் உடனடி ஊத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 1 கப்
- தண்ணீர் - 2 ½ கப்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 1
- கேரட் - 1
- வெங்காயம் - 1
- கொத்தமல்லி - சிறிதளவு
- மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் அரிசி மா மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை போல் ஊற்ற வேண்டும்.
இறுதியாக தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி, 1 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் ஊத்தப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |