Instant vadai: இந்த ஒரு மா இருந்தால் போதும்.., மொறுமொறு வடை செய்யலாம்
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் வடை.
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், 10 நிமிடத்தில் உடனடியாக மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- இஞ்சி- 1 துண்டு
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகு- ½ ஸ்பூன்
- சமையல் சோடா- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் 1 கப் உளுந்தை நன்கு கழுவி வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து சலித்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்த உளுந்து மா சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பிணைந்த மாவை மூடி போட்டு 30 நிமிடம் அப்படியே வைத்து பின் கை வைத்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், மிளகு, சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி பொறித்து எடுத்தால் மொறுமொறு வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |