கோழிக்கறிக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி! கணவர் வெறிச்செயல்
கோழிக்கறிக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை, ஆத்திரத்தில் கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டையை சேர்ந்த தம்பதி போஷம் மற்றும் கலிபெல்லி சங்கரம்மா (45), போஷம் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி குழம்பு செய்யுமாறு கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்பு, அவர் வீட்டுக்கு வரும்போது கோழிக் கறிக்குப் பதிலாக கத்தரிக்காய் குழம்பு தான் இருந்திருக்கிறது.
இதில், ஆத்திரமடைந்த போஷம் சங்கரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு, மதுபோதையில் இருந்த போஷம் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கோடாரியை வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளார், தனது மனைவியின் இறப்பை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பொலிசார் வலைவீச்சு
இந்நிலையில் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் சந்தோஷ், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து சங்கரம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போஷம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னூர் இன்ஸ்பெக்டர் வாசுதேவ ராவ், அதிகாலை 3 மணியளவில் கலிபெல்லி சங்கரம்மா என்பவரை அவரது கணவர் போஷம் கோடரியால் கழுத்தில் வெட்டிய சம்பவத்தில், தலைமறைவாகியுள்ள கணவர் போஷமை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |