மர்ம நபர்களால் 17 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொலை! 7 பேர் கைது
மத்தியப் பிரதேசத்தில் 17 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை பொலிசார் கைது செய்தனர்.
11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கொலை
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கடந்த ஜூலை 10 ஆம் திகதி 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மற்றும் பெண் நண்பர்களுடன் பயிற்சி மையத்தில் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தப்பியோடி விட்டனர்.
அங்கிருந்த சிலர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார், இதில் அவருடன் வந்த பெண் நண்பருக்கு காயம் ஏற்பட்டது.
7 பேர் கைது
17 வயது சிறுமியின் கொலை வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) டி ஸ்ரீனிவாஸ் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்," கைது செய்யப்பட்ட 3 பேர் மகாராஷ்டிராவையும், 2 பேர் டெல்லியையும், தலா ஒருவர் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்" என்று கூறினார்.
மேலும் அவர், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுமித் ராவத், மகாராஷ்டிராவில் உள்ள துலேயில் இருந்து கைது செய்யப்பட்டு, குவாலியருக்குக் கொண்டு வரப்பட்டபோது பனிஹார் கிராமத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவர், குழியில் விழுந்து காயமடைந்துள்ளர். பின்பு அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார்.
முக்கிய குற்றவாளியான சுமித் ராவத் இதற்கு முன்பு சிறையில் இருந்ததாகவும், கொலை வழக்கு தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கொலையாளிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |