கமலா ஹாரீஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம்! அவர் உறவினர் மீனாவுக்கு கடுமையான அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தல் செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியான இவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சமீப நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து மீனா ஹாரிஸுக்கு செய்தியனுப்பி உள்ள வெள்ளை மாளிகை “உங்களை பிரபலப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் பெயரை சமூக வலைதளங்களிலோ, வணிகரீதியாகவோ பயன்படுத்த வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீனா ஹாரிஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
