புடின் புடினே அல்ல... உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் பரபரப்பு தகவல்

Vladimir Putin Ukraine Russian Federation
By Balamanuvelan Aug 05, 2022 08:05 AM GMT
Report

ஈரானுக்குச் சென்ற புடின் புடினே அல்ல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர்.

இந்த வாரம் உக்ரைனில் புதிதாக உளவுத்துறைத் தலைவராக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் Kyrylo Budanov, சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புடினுடைய தோற்றத்தில் வித்தியாசங்கள் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புடினுடைய உயரம் மற்றும் காதுகளின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிவதாக Budanov குறிப்பிட்டுள்ளார்.

காதுகள் கைரேகை போன்றவை என்று கூறும் Budanov, புடினுடைய புகைப்படங்களை கவனித்துப்பார்த்தால், சில படங்களில் அவரது காது சிறியதாகவும், வேறு சில படங்களில் அவரது காது பெரியதாகவும் இருப்பதைக் காணலாம் என்கிறார்.

புடின் புடினே அல்ல... உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் பரபரப்பு தகவல் | Intelligence Chief Sensational Information

Credit: Getty

அத்துடன், புடின் சமீபத்தில் ஈரானுக்குச் சென்றபோது, விமானத்திலிருந்து வெளியே வரும் புடினைக் கொஞ்சம் கவனியுங்கள், அது புடின் தானா என்கிறார் Budanov. 

நடக்கவே தடுமாறும் புடின் வேகமாக மிடுக்காக துள்ளிக் குதித்து வருவதை அந்தக் காட்சியில் காணலாம்.

புடின் புடினே அல்ல... உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் பரபரப்பு தகவல் | Intelligence Chief Sensational Information

Credit: Reuters

ஆக, அது புடினே அல்ல என்று கூறும் Budanov, உண்மையான புடின் மோசமான வகையில் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், பொது நிகழ்ச்சிகளில் புடினுக்கு பதிலாக அவரது டூப் பங்கேற்பதாகவும் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, புடினைப் போலவே தோற்றம் கொண்ட போலி புடின்கள் மூன்று பேர் வரை இருப்பதாக English Russia என்ற நபர் IB Times என்ற ஊடகத்தில் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

புடின் புடினே அல்ல... உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் பரபரப்பு தகவல் | Intelligence Chief Sensational Information

Credit: Getty

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US