சட்டையில்லாமல் உடற்கட்டுடன் நிற்கும் மெஸ்சி: கெத்தாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இன்டர் மியாமி
லீக்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நுழைந்து விட்டோம் என இன்டர் மியாமி அணி புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
தொடர்ச்சியான வெற்றி
நட்சத்திர வீரர் மெஸ்சி இன்டர் மியாமியில் இணைந்ததைத் தொடர்ந்து அந்த அணி அடுத்தடுத்து வெற்றியில் திளைத்து வருகிறது.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி - பிலடெல்பியா அணிகள் மோதின.
Getty Images
இதில் இன்டர் மியாமி அணி 4-1 என்ற கோல் கணக்கில் பிலடெல்பியா அணியை வீழ்த்தியது. ஜோசெப் மார்டினஸ் (3), லியோனல் மெஸ்சி (20), ஜோர்டி அல்பா (45+3) மற்றும் டேவிட் ராய்ஸ் (84) தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து 20ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நாஷ்வில்லே அணியை எதிர்கொள்கிறது இன்டர் மியாமி.
Tim Nwachukwu/Getty Images
இன்டர் மியாமி பகிர்ந்த புகைப்படம்
வெற்றிக்கு பின்னர் இன்டர் மியாமி அணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'இந்த அணி தொடர்ச்சியாக உற்சாகத்தை அளிக்கிறது! லீக்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் சந்திப்போம்' என குறிப்பிட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தில் மெஸ்சி சட்டையில்லாமல் தனது உடற்கட்டை காட்டுகிறார். இன்டர் மியாமியின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Este equipo nos siguen regalando alegrías! Nos vemos en la final de la @LeaguesCup ? pic.twitter.com/CbOSHU1K2Q
— Inter Miami CF (@InterMiamiCF) August 16, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |