எங்கு சென்றாலும் மெஸ்ஸியை நிழல்போல் தொடரும் நபர்! யார் அவர்? வைரலான வீடியோவின் பின்னணி
இன்டர் மியாமி வீரர் மெஸ்ஸியை பின்தொடர்ந்து பாதுகாக்க முயலும் மெய்க்காப்பாளர் ஒருவர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
வெற்றிகளை குவிக்கும் இன்டர் மியாமி
அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
சமீபத்தில் லீக்ஸ் கோப்பையை இன்டர் மியாமி கைப்பற்றியதைத் தொடர்ந்து, US ஓபன் கோப்பை அரையிறுதியில் வெற்றி பெற்றது.
அடுத்த மாதம் இன்டர் மியாமி இறுதிப் போட்டியில் ஹௌஸ்டான் டைனமோ அணியை எதிர்கொள்கிறது.
Anyone else noticed Leo Messi’s bodyguard?
— Leo Messi ? Fan Club (@WeAreMessi) August 17, 2023
He was hired by Inter Miami ?
pic.twitter.com/oGDjYLBnfh
வைரலான வீடியோ
இந்நிலையில், மெஸ்ஸியை மைதானம் முதல் பல இடங்களில் பின்தொடரும் அவரது மெய்க்காப்பாளர் (Bodyguard) தொடர்பிலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த நபர், மெஸ்ஸி தனது அணியின் பேருந்தில் இருந்து இறங்குவது முதல், அவர் குடும்பத்துடன் வெளியே செல்லும் வரை எல்லா இடங்களிலும் பின்தொடர்கிறார்.
?♂️?? During Inter Miami matches, Leo Messi is followed by an ex-US Navy Seal for maximum security.
— EuroFoot (@eurofootcom) August 24, 2023
The bodyguard is a martial arts, boxer and taekwondo expert. He can be seen even following him during matches. pic.twitter.com/Gl8n1UzHXV
யார் அவர்?
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இன்டர் மியாமியின் இணை உரிமையாளரும், கால்பந்து ஜாம்பவானுமான டேவிட் பெக்காம் நியமித்தவர் தான் இந்த மெய்க்காப்பாளர் என்று தெரிய வந்துள்ளது.
AP
யாசின் சூகோ (Yassine Chueko) என்ற அந்த நபர் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர் ஆவார். கடற்படையில் பணியாற்றிய அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சண்டையிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூகோவை மெஸ்ஸியும் பின்தொடர்கிறார்.
அத்துடன் சூகோ MMA மற்றும் பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.
அர்ஜெண்டினா சூப்பர் ஸ்டாரான மெஸ்ஸியை நெருங்க முயற்சிக்கும் ரசிகர்கள் சில சமயங்களில் எல்லை மீறலாம், எனவே தான் அவரது பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பெக்காமின் சக உரிமையாளரான ஜார்ஜ் மாஸ் தெரிவித்துள்ளார்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |