வேளாண் சட்டங்களை அமுல்படுத்த இடைக்கால தடை! மத்திய அரசுக்கு பின்னடைவு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை அமுல்படுத்து உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
செவ்வாயன்று உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தின் மூன்று புதிய வேளான் சட்டங்கள் மற்றும் தற்போதைய விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் மக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கான உரிமை தொடர்பான மனுக்களை விசாரித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில், மேலதிக அறிவிப்பு வரும் வரை வேளாண் சட்டங்களை அமுல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக கூறியது.
வேளாண் சட்டங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க நான்கு பேர் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. மத்திய அரசு-விவசாயிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
பிரச்சினைக்கு தீர்வு காண வழிகளைக் கண்டறிய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி (CJI) தலைமையில் ஒரு குழுவை அமைக்கவும் நீதிமன்றம் முன்மொழிந்தது. பூபேந்தர் சிங் மான், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தவாண்ட் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரையிலோ அல்லது அடுத்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் வரையோ வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த முடியாது.
உச்சநீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பித்தாலும் தங்கள் போராட்டம் தொடரும் என சம்யுக் கிஷான் சங்கம் அறிவித்துள்ளது.