வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் பின்னடைவு... கனடா எடுத்துள்ள அந்த முடிவு
சர்வதேச மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி அனுமதியானது கனடா நிர்வாகத்தால் சமீப காலமாக தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 31 சதவீதம்
மிக சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 30,640 அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 31 சதவீதம் குறைவு.
2024ல் வெளிநாட்டு மாணவர்களுக்கு என 44,295 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கனேடிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வரும் பரந்த போக்கின் ஒரு பகுதியாக இந்தச் சரிவு காணப்படுகிறது.
2023ல் கனடா மொத்தம் 681,155 கல்வி அனுமதிகளை வழங்கியது, அவற்றில் 278,045 இந்தியர்கள். 2024 ஆம் ஆண்டில், மொத்த அனுமதிகளின் எண்ணிக்கை 516,275 ஆகக் குறைந்தது, இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 188,465 ஆகக் குறைந்தது.
வீட்டுவசதி பற்றாக்குறை, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் ஆகியவற்றிற்கு ஓரளவு காரணம் என்று கூறப்படும் பதிவு செய்யப்பட்ட குடியேற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக கனேடிய அரசாங்கம் கொள்கை மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது.
5 சதவீதமாக இருக்க
தற்போதைய பிரதமர் மார்க் கார்னியின் கொள்கை முடிவு என்னவென்றால், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை என்பது 2028 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதே.
இதனை அமுலுக்கு கொண்டுவரும் நோக்கில் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி அனுமதி என்பது 437,000 என IRCC முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி, படிப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கான புதிய தேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது 2024 ஜனவரி 1ம் திகதி முதல் போதுமான நிதி கையிருப்பை நிரூபிக்க வேண்டும். இதுவரை 10,000 கனேடிய டொலர் என இருந்தது, தற்போது 20,635 கனேடிய டொலர் என அதிகரித்துள்ளனர்.
அத்துடன், கல்வி நிலையத்தில் இருந்து ஒப்புதல் கடிதமும் பெற்றிருக்க வேண்டும். கல்வி விண்ணப்பத்திற்கான கட்டணம் 150 கனேடிய டொலர் என்றும், இதர செலவுகளுக்கு என 85 கனேடிய டொலரும் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |