90’ஸ் கிட்ஸ் வாழ்வின் அங்கமாக இருந்த Internet Explorer browserகு இன்று மூடுவிழா!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் பயன்பாடு இன்று முதல் முடிவுக்கு வருகிறது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1995 ஆகஸ்ட் 26ஆம் திகதி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் பரவலான மக்கள் கணினி பயன்பாட்டை தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துணை கொண்டே பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணையவெளியில் தேடி, தெரிந்துகொண்டனர்.
படிப்படியாக பல்வேறு அப்டேட்களை கண்டது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். கடைசியாக கடந்த 2013 வாக்கில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பது.
Shutterstock
அதன் பிறகு விண்டோஸ் 10 வரவு காரணாமாக 2015 வாக்கில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடுத்த வெர்ஷனுக்கான அப்டேட்டை அப்படியே நிறுத்திக் கொண்டது.
மெல்ல மெல்ல எட்ஜ் பிரவுசரை பயனர்கள் மத்தியில் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. விண்டோஸ் 11-இல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ஸ்டார்ட் மெனுவில் இருந்தே தூக்கியிருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விடவும் வேகமான, அதிக பாதுகாப்பான மற்றும் நவீன பிரவுசர் அனுபவத்தை எட்ஜ் பிரவுசர் வழங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.