மணிக்கு 154 km செல்லும் Pulsar NS400 Z அறிமுகம்! மொடல் மற்றும் விலை விவரங்கள்
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) அறிமுகம் செய்த பல்சர் என்எஸ்400 இசட் (Pulsar NS400 Z) பைக் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Pulsar NS400 Z
இந்தியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பல்சர் என்எஸ்400 இசட் (Pulsar NS400 Z) பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு ரூ.1.85 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது அறிமுக சலுகை விலை மட்டுமே.
அதனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை விலை இருக்கும். பின்னர் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. ரூ.5000 முன் தொகையில் இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது, Pulsar NS வரிசையில் உள்ள பைக்குகளின் டிசைனை போலவும், சற்று முரட்டுத் தனமான தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கில் 373 cc திறன் கொண்ட engine உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 40 பிஎஸ் மற்றும் 35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
மேலும், 6 speed gearbox, Ride-by-wire electronic throttle -ல் , 4 விதமான Riding mode உள்ளது. இந்த பைக்கை Glossy Racing Red, Brooklyn Black, Pearl Metallic White, Pewter Grey ஆகிய நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும், Riding அனுபவத்திற்காக 43 மிமீ அளவுள்ள UST Fork முன் பக்கத்திலும், Preload adjustable monoshock பின் பக்க வீலிலும் உள்ளது.
அதோடு, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் வீலில் 4 Piston Crymega Axial Caliper -களுடன் கூடிய 320 மிமீ அளவுள்ள Disc brake, பின் வீலில் 230 மிமீ அளவுள்ள Disc brake உள்ளன.
இந்த பைக்கானது அதிகபட்சமாக மணிக்கு 154 கிமீ வேகத்தில் செல்லும். இது, KTM Duke, Honda CBR, TVS Apache ஆகிய மொடல்களுக்கு போட்டியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |