130 Km ரேஞ்ஜ் தரும் Electric Scooter அறிமுகம்! மொடல் பற்றிய விவரங்கள்
லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) நிறுவனம் அறிமுகம் செய்த எல்எக்ஸ்எஸ் 3.0 (LXS 3.0) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
LXS 3.0 Electric Scooter
லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) நிறுவனமானது எல்எக்ஸ்எஸ் 3.0 (LXS 3.0) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.
LXS 2.0 மொடலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 3 kWh battery pack வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழு ஜார்ஜில் 130 கிலோ மீட்டர் வரையில் ரேஞ்ஜ் தரும்.
இதன் வெளியீட்டை தொடர்ந்து இந்தியா முழுவதும் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் டெலிவரி பணிகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்படும்.
இதில், 1200W Electric motor பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 54 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
குறிப்பாக இந்த ஸ்கூட்டரானது 10.5 நொடியில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் விலை பற்றிய விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட எல்எக்ஸ்எஸ் 2.0 (LXS 2.0) மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.79,999 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |