கனேடிய மாகாணம் ஒன்றில் புதிய புலம்பெயர்தல் திட்டம் ஒன்று அறிமுகம்: விவரங்கள் செய்திக்குள்...
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணம் புதிய புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறது.
ஆல்பர்ட்டாவில், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கென, புதிதாக fast-track புலம்பெயர்தல் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆல்பர்ட்டாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Tyler Shandro, நேற்று முன்தினம் (ஜனவரி 13), இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால், தொழில்நுட்பப் பணியாளர்கள் பெடரல் அரசின் எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பில் profile ஒன்றை உருவாக்கியிருக்கவேண்டும். அத்துடன், அவர்கள் ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்துக்கு தகுதியுடையவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம்.
இந்த புதிய வழிமுறையின்கீழ், கனடா முழுவதிலுமுள்ள மற்றும் வெளிநாடுகளிலுள்ள தொழில்நுட்பப் பணியாளர்கள் ( tech professionals), அவர்களுக்கு பணியாளர் தேவை அதிகம் உள்ள பணியிடம் ஒன்றில் வேலைக்கான ஆஃபர் இருக்கும் பட்சத்தில், ஆறு மாதங்களுக்குள் நிரந்தர வாழிட உரிமம் பெற்றுவிட முடியும் என அமைச்சர் Shandro தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் பரிசீலனையில் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு பணி உரிமம் தேவைப்படும் பட்சத்தில், ஆல்பர்ட்டா அரசும் அவர்களுக்கு ஒரு ஆதரவுக் கடிதம் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆல்பர்ட்டாவில், 3,000க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன என்பதும், அந்நிறுவனங்களுக்கு சேல்ஸ் மற்றும் தொழில்நுட்ப திறன் படைத்த பணியாளர்கள் கிடைப்பது இன்னமும் கடினமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது