ஜெனரேட்டிவ் AI அறிமுகம்! Google Search-ல் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் நிறுவனம், கூகுள் தேடுபொறியில் (Google Search) ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
எதில் பயன்படுத்தலாம்
கூகுள் பயனர்கள் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்படுத்துவதற்கான விருப்பத்தை சேர்ச் லேப்ஸில் தெரிவிக்க வேண்டும்.
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சாதனம் மற்றும் செயலிகளில் ஜெனரேட்டிவ் AI -யின் பங்கு அதிகமாவே உள்ளது. இந்த சமயத்தில் கூகுள் நிறுவனம் கூகுள் சேர்சில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சத்தை இணைத்துள்ளது.
தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த அம்சத்தை கூகுள் குரோம் டெஸ்க்டாப் ( Google Chrome Desktop) வெர்ஷனில் மட்டும் பயன்படுத்த முடியும். அடுத்து வரும் நாள்களில் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (IOS) பயனர்களுக்கு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டிவ் ஏஐ (generative AI)
கடந்த ஆண்டு டிசம்பரில் கூகுள் இந்தியா ஜெனரேட்டிவ் ஏஐ அம்சத்தை டெமோ செய்தது. தற்போது சேர்ச் லேப்ஸ் மூலம் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. பயனர்களின் தேடுதல் அனுபவத்தை எளிதாக்க ஜெனரேட்டிவ் ஏஐ துணையுடன் கூகுள் உதவும்.
கூகுள் சேர்ச் மூலம் சில கேள்விகளுக்கு பதில் தர முடியாது என நினைக்கும் பயனர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் பதில் கிடைக்கும். புதிய இன்சைட்ஸ் மற்றும் வியூபாயிண்ட்ஸ் அதிவேகமாகவும், எளிதாகவும் பயனர்களுக்கு உதவும்.
முக்கியமாக இதில், பயனர்கள் ஒரு கேள்வி கேட்டால், அதற்கான பதிலையும், அதை சார்ந்துள்ள கேள்விக்கான பதிலையும் வழங்கும். மேலும், இது சோதனை முயற்சி எனவும் கூகுள் கூறியுள்ளது.
பயனர்கள் labs.google.com/search என்ற லிங்கை பயன்படுத்தி SGE ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். அபோது தான், கூகுள் தேடுபொறியில் பயனர்கள் தேடும் போது ஏஐ வியூவையும் பார்க்க முடியும்.
Today we’re starting to open up access to Search Labs, where you can try early generative AI experiments from Google. Opt in by tapping the Labs icon on the latest versions of your Google app or desktop Chrome, or join the waitlist at https://t.co/zD6OCpRPH8. pic.twitter.com/NERBdmNPTW
— Google (@Google) May 25, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |