முழு சார்ஜில் 35 கிமீ வரை செல்லும் E-Cycle அறிமுகம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இ-மோட்டாராட் (EMotorad) நிறுவனமானது பேட்டரியில் இயங்கும் புதிய மிதிவண்டியை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
E-Cycle அறிமுகம்
இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டியை உற்பத்தி செய்துவரும் இ-மோட்டாராட் (EMotorad) நிறுவனமானது எஸ்டி-எக்ஸ் (ST-X) எனும் எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் உண்மையான விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக சிறப்பு சலுகையாக ரூ.29,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-சைக்கிளுக்கு 5 ஆண்டுகள் Warranty வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சைக்கிள் முன்னணி பிராண்டுகளின் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக மாறலாம்.
இந்த சைக்கிளை தயார் செய்வதற்கு உயர் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்ட ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, குறைந்த வேக திறன் கொண்ட Electric scooters-க்கு இணையான வேகத்தில் இயங்கும் திறன் உள்ளது. இதன் Top speed மணிக்கு 25 கிமீ ஆகும். ஓர் முழு சார்ஜில் 35 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், இந்த சைக்கிளில் 7.65 Ah திறன் கொண்டLithium Ion Battery Pack பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தேவைப்படும்.
இந்த சைக்கிளின் பின் வீலில் 36 வோல்ட் 250 வாட் திறன் கொண்ட ஹப் வகை மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஓர் சிறிய கிளஸ்டர் சி2 திரையும் உள்ளது.
அதோடு, பாதுகப்பிற்காக ஹாரன், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
பீஜ் மற்றும் டீல் ப்ளூ என்கிற இரண்டு விதமான வண்ணங்களில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |