30 நிமிடங்களில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிப்பு.., எப்படி செயல்படும்?
எந்தவிதமான வலியும் இல்லாமல் அப்படியே இறப்பதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.
வாழ்க்கையில் மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்களும், குடும்பத்தாலும், வெளியுலகத்தாலும், உறவுகளாலும் ஏற்படும் பிரச்சனையில் இருப்பவர்களும் தனக்கான முடிவை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் அளித்தும் அவர்கள் துயரமான முடிவை எடுக்கின்றனர்.
இன்னும் சில நாடுகளில் கருணைக் கொலை மற்றும் தற்கொலை ஆகியவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டிலும் தற்கொலை செய்து கொள்வது அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
என்ன இயந்திரம்?
சுவிட்சர்லாந்து நாட்டில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Exit International என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த இயந்திரத்தை கண்டுபிடித்து அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பவர்கள் இயந்திரத்தை வாங்கி அதற்குள் படுத்தாலே போதும். 30 வலியில்லாமல் இறப்பை சந்திக்கலாம். இயந்திரத்திற்குள் படுப்பவரின் ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவை குறைத்து நைட்ரஜன் வாயுவை அதிக அளவில் சுவாசிக்கச் செய்யும். பின்னர் அவர் சுயநினைவை இழந்து இறந்து விடுவார்.
மேலும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதற்கு ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகளும் உள்ளன. சிறு விடயங்களுக்கு கூட இந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |