iPhone 17 Pro வாங்கும் பணத்தை SIP-யில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா?
iPhone 17 Pro மொபைல் வாங்கும் பணத்தை SIP-யில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் எவ்வளவு என இங்கே தெரிந்துகொள்ளலாம்.
புதிய iPhone 17 Pro Max, ரூ.1,50,000 விலையில் அறிமுகமாகியுள்ளது. பலர் இந்த செலவினை மாத தவணை (EMI) மூலம் ரூ.4,200 மாதம் செலுத்தி வாங்க திட்டமிடுகின்றனர்.
ஆனால், இந்த தொகையை முதலீடாக மாற்றினால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tradejini நிறுவனத்தின் COO திரிவேஷ், “ஒருவர் ரூ.4,100 மாதம் SIP (Systematic Investment Plan) மூலம் 3 ஆண்டுகள் முதலீடு செய்தால், 12% சராசரி வருமானம் அடிப்படையில் ரூ.1,76,600 வரை பெறலாம். இதில் ரூ.29,000 வருமானம் கிடைக்கும்.” என கூறியுள்ளார்.
மேலும், ரூ.2,30,000 மதிப்புள்ள உயர் தர iPhone மொடலை வாங்கும் பணத்தை முதலீடாக மாற்றினால் ரூ.45,300 வருமானம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது, உடனடி மகிழ்ச்சியை விட நீண்ட கால நிதி பாதுகாப்பை வழங்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
“ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றால் வாங்கலாம். ஆனால், நிதி வளர்ச்சியை நோக்கி செல்ல விரும்பினால் SIP முதலீடுகள் சிறந்த தேர்வாக இருக்கும்,” என திரிவேஷ் கூறியுள்ளார்.
முதலீட்டை தொடங்க விரும்பும் நபர்கள், Flexi-cap, Multi-cap மற்றும் Aggressive Hybrid Funds போன்ற வகைகளை தேர்வு செய்யலாம்.
இவை சந்தை நிலைமையை பொருத்து பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் தன்மை கொண்டவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone 17 Pro EMI SIP investment, SIP vs smartphone purchase, invest instead of buying iPhone,iPhone 17 Pro price India, mutual fund returns SIP 2025, EMI calculator SIP returns, long-term investment