ரூ.15 ஆயிரம் முதலீடு செய்தால் மாத ஓய்வூதியமாக ரூ.50,000 பெறலாம்.., சூப்பரான திட்டம் தெரியுமா?
முதுமையில் ஓய்வூதியம் பெறுவதற்கான சிறந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
(தேசிய ஓய்வூதிய அமைப்பு) National Pension System
NPS என பிரபலமாக அறியப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு, முதியோர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் ஒரு மொத்த தொகையைப் பெறுவீர்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் உங்களுக்காக ஓய்வூதியம் வழங்கவும் ஏற்பாடு செய்கிறீர்கள்.
NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உரியதானது.
இந்த திட்டத்தில் டயர் 1 (Tier 1) மற்றும் டயர் 2 (Tier 2) என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. டயர் 1 கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் டயர்-1 கணக்கு இருந்தால் மட்டுமே டயர்-2 கணக்கை தொடங்க முடியும்.
உங்களுக்கு 60 வயதை தாண்டிய பிறகு, NPS-ல் முதலீடு செய்த மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
எஞ்சிய 40 சதவீத தொகையை வருடாந்திரமாக பயன்படுத்த வேண்டும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து ஓய்வூதியம் பெறுவீர்கள்.
நீங்கள் 35 வயதில் NPS -ல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.
அதாவது 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெற வேண்டுமானால், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.
NPS கால்குலேட்டரின் படி, ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை 25 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும்.
ஆனால் 10% வீதத்தில் இதற்கான வட்டி ரூ.1,55,68,356 ஆக இருக்கும். அதன்படி, உங்களிடம் மொத்தம் ரூ.2,00,68,356 இருக்கும்.
இதில் 60% தொகையை, அதாவது ரூ.1,20,41,014 -யை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். எஞ்சிய 40% -யை நீங்கள் வருடாந்திரமாகப் பயன்படுத்தினால், 40% வீதத்தில், ரூ. 80,27,342 உங்கள் பென்சன் தொகையாக மாறும்.
நீங்கள் வருடாந்திர தொகையில் 8% வருமானம் பெற்றால், ஒவ்வொரு மாதமும் 53,516 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |