FD -ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 2 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்?
2 ஆண்டுகள் கால அளவு கொண்ட Fixed Deposit -யை பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.
அந்தவகையில், 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட டெபாசிட்களில் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 வருட Fixed Deposit -க்கு 6.80% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வங்கியில் நாம் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக திரும்ப கிடைக்கும்.
கனரா வங்கி (Canara Bank)
கனரா வங்கியில் 2 வருட Fixed Deposit -க்கு 6.85% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வங்கியில் நாம் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக திரும்ப கிடைக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2 வருட Fixed Deposit -க்கு 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வங்கியில் நாம் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக திரும்ப கிடைக்கும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் 2 வருட Fixed Deposit -க்கு 7.10% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதே போல ஆக்ஸிஸ் வங்கியும் (Axis Bank) இதே வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தியன் வங்கி (Indian Bank)
இந்தியன் வங்கியில் 2 வருட Fixed Deposit -க்கு 6.50% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வங்கியில் நாம் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகையானது 2 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக திரும்ப கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |