தினமும் ரூ.200.. ஒரு வருட கால முதலீடு மட்டுமே., 10 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் பெரிய தொகை
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தினமும் ரூ.200 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Kisan Vikas Patra 2024
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) திட்டம் என்பது அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமானது கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது ஆகும்.
இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் 9.5 ஆண்டுகள் அல்லது 115 மாதங்களில் ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.
அதாவது, இந்த திட்டமானது 7.5 % கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது இதனால், ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டமாக அமைகிறது.
இந்த திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். குறிப்பாக, 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் தொடங்கலாம்?
* இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு வயது வந்த தனிநபர் அல்லது கூட்டு (3 பெரியவர்கள் வரை) கணக்கைத் திறக்க தகுதியுடையவர்.
* 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் கணக்குகளைத் திறக்கலாம்.
* சிறார்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் சார்பாக பாதுகாவலர்கள் கணக்குகளை திறக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
முதலீடு
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் அதன் இரட்டிப்பு அம்சமாகும். அதாவது, நம் முதலீடு தொகையானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகும்.
இதன் இரட்டிப்பு காலமானது 115 மாதங்கள் அல்லது தோராயமாக 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். அதாவது , ஒரு வருடத்திற்கு நீங்கள் தினமும் ரூ.200 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் அதன் தொகை இரட்டிப்பாகும்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் தினமும் ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில் 7.5 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்துடன் உங்கள் முதலீடு 115 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |