365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
1 வருட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும்.
வங்கிகள் பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.
அதாவது வங்கிகள் 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு போன்ற பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி FD (State Bank of India FD)
பாரத ஸ்டேட் வங்கியில் 1 வருட FDக்கு பொது குடிமக்கள் 6.80 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.30 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
இப்போது பொதுக் குடிமக்கள் 365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.13,951 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.2,13,951 பெறுவீர்கள்.
அதேபோல மூத்த குடிமக்கள் 365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.15,005 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ. 2,15,005 பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |