ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
ஐசிஐசிஐ வங்கியில் 3 வருட எஃப்டியில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ICICI Fixed Deposit
FD அல்லது நிலையான வைப்பு, ஒரு நிதித் திட்டமாகும். இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யலாம்.
பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வெவ்வேறு கால அவகாசத்துடன் FD திட்டங்களை வழங்குகின்றன. அவர்களின் நிதி இலக்குகள் மற்றும் பணப்புழக்கத் தேவைகளின் அடிப்படையில், முதலீட்டாளர்கள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை காலத்தை தேர்வு செய்யலாம்.
Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.
3 வருட நிலையான வைப்புத்தொகைக்கு, ஐசிஐசிஐ வங்கி பொது குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
1777 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை?
ஐசிஐசிஐ வங்கியில் பொதுக் குடிமக்களுக்கு குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.10,000 ஆகும். ஐசிஐசிஐ வங்கி 3 வருட எஃப்டியில் நீங்கள் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.69,431.79 கிடைக்கும். அதன்படி உங்களுக்கு முதிர்வு தொகையாக ரூ.3,69,431.79 பெறுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |