ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் வட்டி.., Post Office -ன் முக்கியமான திட்டம் பற்றி தெரியுமா?
அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme)
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு அதில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற முடியும்.
மேலும், அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு மூத்த குடிமகனும் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குப் முதிர்ச்சியடைகிறது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதேபோல, இந்த திட்டம் விருப்பு ஓய்வு (VRS) எடுத்தவர்களுக்கும் பொருந்தும்.
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் வரிவிலக்கு பெறுவீர்கள். ஆனால், அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். மேலும், 50,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால், வட்டிக்கு TDS விதிக்கப்படும்.
ரூ.5 லட்சம் முதலீடு
இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.5,00,000முதலீடு செய்தால் செய்தால், 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.2,05,000 கிடைக்கும். அதன்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதிர்வுத் தொகையாக ரூ.7,05,000 பெறுவீர்கள்.
அதன்படி, இதன் காலாண்டு வட்டி வருமானம் ரூ.10,250 ஆகவும், மாத வட்டி வருமானம் ரூ 3,416 ஆகவும், ஆண்டு வட்டி வருமானம் 41,000 ஆகவும் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |