Post Office -ல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம் தெரியுமா?
அஞ்சல் அலுவலக திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் கிடைக்கும் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன திட்டம்?
ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் சரி, கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் சரி சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும்.
அப்படி சேமிப்பதற்கு அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் துறை ஒய்வூதிய திட்டம், பெண்களுக்கான சேமிப்பு திட்டம், விபத்து காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது.
அந்தவகையில், கிராமப்புற மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் கிராம சுரக்ஷா யோஜனா (Post Office Gram Suraksha Yojana) என்ற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தில் தினமும் ரூ.50 செய்தால் போதும், முதிர்ச்சியின் போது ரூ.35,00,000 தொகையை பெறலாம். அதன்படி மாத டெபாசிட் ரூ.1,500 ஆக இருக்கும்.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் (Post Office Gram Suraksha Yojana) 19 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 ஆகும். அதேபோல அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். இந்த திட்டத்தில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்தால், அதவாது மாதம் ரூ.15,00 டெபாசிட் செய்தால் முதிர்ச்சியின் போது ரூ.35,00,000 தொகையைப் பெறலாம்.
நீங்கள் 19 வயதில் ரூ.10 லட்சம் கிராம் சுரக்ஷா யோஜனா வாங்குகிறீர்கள் என்றால் 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். அதேபோல 58 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,463 பிரீமியம் செலுத்த வேண்டும். 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் நீங்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. மேலும், திட்டத்தை தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு போனஸும் கிடைக்கும். பாலிசிதாரர் 80 வயதை நிறைவு செய்யும் போது முதிர்வு தொகையான ரூ.35 லட்சம் அவரிடம் ஒப்படைக்கப்படும்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |