கோடீஸ்வரர் ஆக்கும் PPF திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தற்போதைய காலத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், முதுமை காலத்திற்கு தேவையான பணத்தை இப்பொழுது முதலே சேமிப்பது அவசியமான ஒன்று.
அப்படி நாம் சேமிப்பதற்கு அரசு பல திட்டங்கள் அறிவித்துள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்பது முதலீட்டுத் திட்டங்களில் பாதுகாப்பான ஒன்றாகும். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த தேவை இல்லை.
உங்கள் மனைவியுடன் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.
இதில் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது மாதத்திற்கு கணவன் மனைவி இருவரும் தலா ரூ.12,500 முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். திட்டம் முடிய ஓராண்டுக்கு முன்னரே PPF கணக்கு வைத்துள்ள வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பித்து, கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு அதில் முதலீடு செய்ய முடியும்.
20 ஆண்டுகளில் ரூ.1 கோடி
இதன்படி, 20 ஆண்டுகளில் இருவரும் தலா ரூ.30 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுவதால், இருவரின் கணக்கில் ரூ.36,58,288 வட்டி வரும்.
இதன்படி ஒருவரின் கணக்கில், ரூ.66,58,288 இருக்கும். மற்றொருவரின் கணக்கிலும்அதே போல் ரூ.66,58,288 இருக்கும்.
இதன் மூலம் ரூ.66,58,288 + ரூ.66,58,288 என மொத்தம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரத்து 576 கிடைக்கும்.
கணவன் மனைவி இருவரும் இனைந்து சேமிப்பதன் மூலம் 20 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகி விட முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |