ஜேர்மனியில் 17 பொலிசார் வீடுகளில் அதிகாரிகள் ரெய்டு
ஜேர்மன் நகரமொன்றில், 17 பொலிசாருடைய வீடுகளில் அதிகாரிகள் ரெய்டுகளில் ஈடுபட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
17 பொலிசார் வீடுகளில் ரெய்டு
ஃப்ராங்பர்ட் நகரில், 5 பெண் பொலிசார் மற்றும் 12 ஆண் பொலிசாருடைய வீடுகளை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
தாக்குதல், சட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் தவறான தண்டித்தல் முதலான விடயங்கள் தொடர்பில் அந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில், 6 ஆண்கள் கைது செய்யப்படும்போது அல்லது அதற்குப் பின் தாக்கப்பட்டுள்ளார்கள்.
தங்கள் தரப்பில் நியாயம் உள்ளதாகக் காட்டுவதற்காக, அந்த ஆறு பேரில் ஐந்து பேர் மீது அந்த பொலிசார் வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பில்தான் தற்போது அந்த 17 பொலிசார் வீடுகளிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளில் 150 அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள்.
ரெய்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிசாரின் மொபைல்கள், கணினிகள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |