மாதம் ரூ.5,000 முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை மாதங்களில் கோடீஸ்வரர் ஆக முடியும் என்ற SIP திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் முதலீடு என்பது முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் தான் விடயமே உள்ளது.
பொதுவாகவே எல்லோருக்கும் நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் தான் எண்ணமாக இருக்கும். தற்போதைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட எப்படி முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.
Equity Mutual Funds
நீண்ட கால சேமிப்பிற்கு Equity Mutual Funds சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் சிறிய தொகையை முதலீடு செய்தாலும் கூட்டு வட்டி காரணமாக நீண்ட காலத்தில் பெரிய தொகையை பெற முடியும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானமானது ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளை விட அதிகமாக இருக்கும்.
மொத்தமாக நாம் ரூ.1 கோடியை சேமிக்க வேண்டுமென்றால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முதலீட்டைத் தொடங்கலாம். இதில் நீங்கள் மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்
இப்போது நாம் ரூ.1 கோடியை பெற வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு நீங்கள் உங்களது சம்பளத்தில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முதலீடு செய்தாலே போதும்.
எவ்வளவு முதலீடு?
உங்களது மாத சம்பளம் ரூ.50000 என வைத்துக் கொள்வோம். இதில் இருந்து 15 சதவீதத்தை முதலீடு செய்கிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், நீங்கள் ரூ.7,500 ரூபாயை ஒவ்வொரு மாதமும், 12 % வருடாந்திர வருமானத்தை வழங்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள்.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றால் 276 மாதங்கள் அல்லது 23 ஆண்டுகளில் ரூ.1 கோடியைச் சேமிக்க முடியும்.
அதேபோல உங்களது ரூ. 50,000 மாத சம்பளத்தில் 20 சதவீதத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், ரூ. 10,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் 12 % வருடாந்திர வருமானத்தை வழங்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள்.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றால் 249 மாதங்கள் அல்லது 20.75 ஆண்டுகளில் ரூ.1 கோடியைச் சேமிக்க முடியும்.
இதுவே நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 12% வட்டி விகிதத்தில் ரூ.1 கோடியை சேமிக்க 317 மாதங்கள் அல்லது 26.4 ஆண்டுகள் ஆகும்.
இந்த செய்தியை நீங்கள் முதலீடு செய்வதற்குரிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் முதலீடு செய்வதற்குரிய முடிவை எடுக்கும் போது பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட பிறகு முடிவை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |