ட்ரம்பால் 1,000 அலுவலர்களை வீட்டுக்கு அனுப்பும் புலம்பெயர்தல் அமைப்பு
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதும், பல்வேறு நாடுகளுக்கு மனிதநேய நிதி உதவிகளை அளித்துவரும் அமைப்பையே கலைக்க உத்தரவிட்டுவிட்டார்.
ட்ரம்ப் உத்தரவின் தாக்கம் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
புலம்பெயர்தல் அமைப்பில் 1,000 அலுவலர்கள் வேலையிழப்பு
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதும், பல்வேறு நாடுகளுக்கு மனிதநேய நிதி உதவிகளை அளித்துவரும் அமைப்பான USAID என்னும் அமைப்புக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்ட The International Organization for Migration (IOM) என்னும் தொண்டு நிறுவனமும் 20 சதவிகித அலுவலர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா அளித்துவந்த நிதி கிட்டத்தட்ட மொத்தமாக காலி ஆக உள்ள நிலையில், ட்ரம்பின் நடவடிக்கையால், சுவிட்சர்லாந்தின் IOM அமைப்பில் சுமார் 1,000 அலுவலர்கள் வேலையிழக்க இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |