ட்ரம்பின் ஒற்றை முடிவால் மில்லியன் கணக்கானோர் இறப்பார்கள்: எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு
அமெரிக்க அரசாங்கம் நிதியுதவி செய்துவரும் USAID என்ற அமைப்பை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளது, மில்லியன் கணக்கானோரின் இறப்புக்கு காரணமாக அமையும் என வத்திக்கான் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மஸ்குடன் இணைந்து
ட்ரம்பின் இந்த முடிவு பொறுப்பற்றது மட்டுமின்றி மனிதாபிமானமற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சி செய்யும்போது மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுவது குறித்த கிறிஸ்தவ கொள்கைகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வத்திக்கான் தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் எலோன் மஸ்குடன் இணைந்து முதலில் குறிவைத்த அமைப்பு USAID என்றே கூறுகின்றனர். நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியுள்ளதால், உலகின் பல்வேறு நாடுகளில் திட்டங்கள் பல முடங்கியுள்ளது.
USAID அமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தற்போது இந்த அமைப்புக்கு நிதியுதவியை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளதால் HIV, AIDS பாதிப்பால் 6 மில்லியன் மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது.
20 நாடுகள்
மேலும், புலம்பெயர் மக்களுக்கான உதவிகளும் முன்னெடுக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 20 நாடுகள் ட்ரம்பின் இந்த ஒற்றை முடிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளில் 8,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கடந்த வாரம் தெரிவித்தார்.
சிலர் பெடரல் சிறைகளிலும், மற்றவர்கள் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத் தளத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |