ஐபோன் 16 குறித்த முக்கிய கசிவுகள்!கேமரா, பற்றரி, வடிவமைப்பில் பெரும் மாற்றங்கள்?
ஒவ்வொரு வருடமும் போல், இந்த வருடமும் செப்டம்பர் மாதத்தில் தங்களின் புதிய ஐபோன் தொடரை வெளியிட ஆப்பிள் நிறுவனம் தயாராக இருக்கிறது.
இந்த வருடத்தின் ஐபோன் 16 இல், ஆப்பிள் நிறுவனம் சில முக்கிய வடிவமைப்பு மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் iOS 18 இல் அறிமுகப்படுத்தப்படும் புதிய AI அம்சங்களை திறம்பட கையாள ப்ராசஸர் (processor) வேகத்தையும் அதிகரித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஐபோன் 16 குறித்த முக்கிய கசிவுகள்
கேமரா
ஐபோன் 12 இன் வடிவமைப்பைப் பின்பற்றி, ஐபோன் 16 இல் செங்குத்து மாத்திரை வடிவிலான கேமரா அமைப்பை ஆப்பிள் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த தலைமுறையின் ஐபோன் 15 லைன் அப்பில் ப்ரோ மாடல்களுக்கு பிரத்யேகமாக இருந்த புதிய 5x ஆப்டிகல் ஜூம் லென்ஸ் (Tetraprism)ஐ ஆப்பிள் 16 இல் சேர்க்க வாய்ப்புள்ளது.
வடிவமைப்பு
கேமரா அமைப்பில் மாற்றம் தவிர, ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் லைன் அப்பில் இந்த வருடம் ஆக்ஷன் பட்டனை இறுதியாகச் சேர்க்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த வருடத்தின் ப்ரோ லைன் அப்பில் ஆக்ஷன் பட்டன் மியூட் சுவிட்ச்சின் இடத்தைப் பிடித்தது.
மேலும், இந்த வருடம் அனைத்து ஐபோன் 16 மாடல்களிலும் கேமரா படம் பிடிக்கும் பொத்தானை ஆப்பிள் சேர்க்கலாம். இது கருவியை கிடைமட்டமாக வைத்திருக்கும்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க மக்களுக்கு உதவலாம்.
செயல்திறன்
ஐபோன் 16 தொடரின் ப்ராசஸர்கள்(processor) புதிய தலைமுறை A18 சிப்களாக இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பணிகளை கையாள்வதற்காக ப்ரோ மாடல்களுக்கு மேம்படுத்தப்பட்ட நரம்பு செயலாக்க அலகு (NPU) உடன் கூடுதல் பலம் கிடைக்கலாம்.
பற்றரி
ஐபோன் 15 உடன் ஒப்பிடும்போது, ஐபோன் 16 இன் பற்றரி ஆயுள் 6% அதிகரிக்கக்கூடும்.
கடந்த தலைமுறையின் ஐபோன் 15 இல் இருந்த ஃபாயில் கேஸிங்கை விட, பற்றரி வெப்பத்தை சிறப்பாக கையாள உலோக கவசத்தை ஆப்பிள் பயன்படுத்தக்கூடும்.
இந்த மாற்றம் வெப்பக் கசிவு பிரச்சனையைக் குறைத்து, ஐபோன் 15 பயனர்கள் எதிர்கொண்ட வெப்பமடைதல் பிரச்சனைகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |