Flipkart Big Billion Days Sale 2025: iPhone 16 Pro மற்றும் Pro Max-க்கு அதிரடி தள்ளுபடி
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான Flipkart, 2025 Big Billion Days Sale-ல் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மாடல்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
iPhone 16 Pro ரூ.69,999-க்கும், iPhone 16 Pro Max ரூ.89,999-க்கும் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
iPhone 16 Pro மாடல்கள் 2024-ல் வெளியானவை. 6.3-inch Super Retina XDR OLED display, HDR 10 ஆதரவு, 120 Hz refresh rate மற்றும் 1600 nits peak brightness கொண்டவை.
iPhone 16 Pro Max மாடலில் 6.9-inch Super Retina XDR OLED display வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் oleophobic coating கொண்டுள்ளதால் விரல் தடங்கள் ஏற்படாது.
இரண்டும் TSMC-ன் 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A16 Pro Bionic chipset மூலம் இயக்கப்படுகின்றன. 8GB RAM மற்றும் 128GB, 256GB storage விருப்பங்களுடன் வருகின்றன.
கேமரா அம்சங்களில் 48MP primary, 48MP ultrawide மற்றும் 12MP telephoto லென்ஸ்கள் உள்ளன. முன்பக்க கேமரா 12MP ஆகும்.
இந்த தள்ளுபடி வரும் செப்டம்பர் 23-ஆம் திகதி தொடங்கும் Flipkart Big Billion Days Sale-ல் மட்டுமே கிடைக்கும். iPhone வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Flipkart Big Billion Days Sale 2025, iPhone 16 Pro, iPhone 16 Pro Max