Apple iPhone 16e இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Apple தனது iPhone 16 தொடரில் புதிய iPhone 16e மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
A18 chipset-உடன் செயல்படும் இந்த மாடல், Apple Intelligence அம்சங்களை ஆதரிக்கிறது.
மேலும், இது Apple நிறுவனத்தின் சொந்த C1 Modem-உடன் வந்துள்ள முதல் iPhone ஆகும்.
- முன்பதிவு: பிப்ரவரி 21, 2025
- விற்பனைத் தொடக்கம்: பிப்ரவரி 28, 2025
iPhone 16e - இந்திய விலை
128GB - ரூ.59,900
256GB - ரூ.69,900
512GB - ரூ.89,900
வடிவமைப்பு மற்றும் திரை
iPhone 16e அலுமினியம் ஃபிரேம் மற்றும் கண்ணாடி பின்புறம் கொண்டது. 6.1-inch Super Retina XDR OLED திரை, 1200 nits அதிகபட்ச பிரகாசத்துடன் வருகிறது. Ceramic Shield பாதுகாப்பு மற்றும் IP68 நீர்-தாங்கு தன்மை இதில் உள்ளது.
செயல்திறன் மற்றும் Apple Intelligence
A18 Chip மற்றும் 4-core GPU மூலம் மேம்பட்ட செயல்திறன் இருக்கும்.
16-core Neural Engine (NPU) - மேம்பட்ட AI மற்றும் Machine Learning செயல்பாடுகளுக்கு உதவும்.
Apple Intelligence அம்சங்கள்:
- Writing Tools, Notification Summary, Image Playground, Genmoji
- Visual Intelligence - உரை சுருக்கம், மொழிபெயர்ப்பு, Google/ChatGPT தேடல்
Camera
- 48MP Primary Camera - OIS மற்றும் Hybrid Focus Pixels
- 12MP front Camera - ஆட்டோ ஃபோகஸ், சுய நிலைபாடு
- 4K Dolby Vision வீடியோ (60fps வரை)
- 240fps slo-mo Video, Spatial Audio recording
- Audio Mix & Wind Noise Reduction
பேட்டரி மற்றும் சார்ஜிங்
- 26 மணி நேரம் வீடியோ பிளேபேக், 90 மணி நேரம் ஆடியோ பிளேபேக்
- USB-C (20W+) மூலம் 30 நிமிடத்தில் 50% சார்ஜ்
- Qi Wireless Charging (MagSafe ஆதரவு இல்லை)
Connectivity
C1 Modem - அதிக ஆற்றல் திறன் கொண்ட முதல் iPhone மோடம்
5G, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC ஆதரவு
Apple iPhone 16e சிறந்த செயல்திறன், கேமரா தொழில்நுட்பம், மற்றும் AI அம்சங்கள் கொண்டுள்ளது. இந்தியாவில் முன்பதிவு பிப்ரவரி 21-இல் தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |