பாத்ரூமில் கேட்ட விசித்திர சத்தம்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த விலை உயர்ந்த பொருள்.. சுவாரஸ்ய தகவல்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன ஐபோன் ஒன்று மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Maryland பகுதியில் வசித்து வருபவர் Becki. சில நாட்களாகவே இவரது வீட்டின் பாத்ரூமில் இருந்து எதோ ஒரு வினோதமான சத்தம் அடிக்கடி கேட்டுள்ளது.
அந்த சத்தம் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால் Becki மற்றும் அவரது கணவர் பதற்ற நிலையை அடைந்துள்ளனர். மேலும் அந்த வெஸ்டர்ன் டாய்லட்டை பழுது பார்க்க Becki-யின் கணவர் முடிவு செய்துள்ளார்.
அப்போது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது, யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு Becki தொலைத்த ஐ போன் அதற்குள் இருந்துள்ளது.
அந்த போன் பைப்பில் இருந்ததால் நல்ல கண்டிஷனில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து Becki கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய ஐ போன் ஒன்றை தொலைத்தேன்.
வீடு முழுவதும் தேடியும் மீண்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதால் புதிய போனை வாங்கினேன். ஆனால் தற்போது சுமார் 10 ஆண்டுக்கு பிறகு எனக்கு அந்த போன் கிடைத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எப்படி டாய்லட்டுக்குள் சென்றது என்பது மட்டும் குழப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.