iPhone SE 4 பிரமாண்ட வெளியீடு - விலை எவ்வளவு தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் இன்று தனது iPhone SE 4-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வடிவமைப்பு, OLED டிஸ்ப்ளே, ஆப்பிளின் in-house 5G modem மற்றும் powerful A18 chip உள்ளிட்ட பல முக்கிய மேம்படுத்தல்கள் இந்த புதிய iPhone-இல் காணப்படும்.
இந்த போன் பழைய iPhone SE மாடல்களை விட மிகவும் மேம்பட்டதாக இருக்கும். சில அறிக்கைகளில் ஆப்பிள் இந்த புதிய மாடலை SE தொடர் என்று பெயரிடுவதற்குப் பதிலாக iPhone 16E என அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது நடந்தால், அது SE தொடருக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.
iPhone SE 4 வெளியீட்டு நிகழ்வு
Apple iPhone SE 4 வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கும் (IST) காலை 10:00 மணிக்கும் (PT) நடைபெறும்.
இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெறும், அங்கு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்த புதிய iPhone அறிமுகப்படுத்துவார்.
இந்த நிகழ்வை நேரடியாகப் பார்க்க விரும்புவோர், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி செயலி மற்றும் நிறுவனத்தின் சமூக ஊடகக் கணக்குகள் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் இதைப் பார்க்கலாம்.
ஆப்பிள் எப்போதும் தனது தயாரிப்பு வெளியீட்டு நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்தும். எனவே இது தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக இருக்கும்.
iPhone SE 4 விலை எவ்வளவு?
புதிய iPhone SE 4-ன் விலை குறித்து பல ஊகங்கள் வெளியாகி வருகின்றன. அறிக்கைகளின்படி, இதன் விலை அமெரிக்காவில் 499 அமெரிக்க டொலர்களாக இருக்கலாம்.
இந்த போனை இந்தியாவில் ரூ. 50,000 முதல் ரூ55,000 வரை அறிமுகப்படுத்தலாம். அதே நேரத்தில், பிரிட்டனில் இதன் விலை 449 பவுண்ட்ஸ் ஆகும்., ஐரோப்பாவில் 529 யூரோ மற்றும் கனடாவில் 680 கனேடிய டொலர் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஆப்பிள் அதை iPhone 16E ஆக அறிமுகப்படுத்தினால், அதன் விலை அதிகரிக்கக்கூடும்.
வழக்கமாக ஆப்பிள் அதன் SE மாடல்களை மலிவு விலையில் ஐபோன்களாக அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இந்த முறை OLED டிஸ்ப்ளே மற்றும் A18 சிப் போன்ற பிரீமியம் அம்சங்கள் காரணமாக விலை முன்பை விட அதிகமாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |