தோனி இப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கவில்லை... ஆவேசமான CSK வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதிவில் இருந்து விலகுவதாக தோனியின் அறிவிப்பால் உடைந்து போனதாக நியூஸிலாந்து வீரர் டெவன் கான்வே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதிவில் இருந்து தோனி விலகுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இதனை தொடர்ந்து, சென்னை அணியின் புதிய கேப்டன் ஆக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
?️ Thoughts on Thala ft. Conway!#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/P6E68s3oXN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2022
இந்தநிலையில், சென்னை அணிக்கும் சரி, ஐபிஎல் போட்டிகளுக்கும் சரி முதல் முதலாக களமிறங்கும் நியூஸிலாந்தின் இடது கை பேட்ஸ்மேன் டெவன் கான்வே தோனியின் இந்த அறிவிப்பு எனது இதயத்தை நொறுக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை சென்னை அணிக்கு அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். அதில் தோனியை பற்றி நிறைய கேள்விப்பட்டது உண்டு ஆனால் நேரில் இதுவரை சந்தித்து இல்லை, நான் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பிறகு தோனியின் தலைமையில் விளையாட வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு மற்றும் அவல் கொண்டு இருந்தேன், ஆனால் தோனியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் அறிவிப்பினால் எனது இதயம் நொறுங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
டெவன் கான்வே சென்னை அணிக்காக விளையாண்ட முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இருப்பினும் இன்று லக்னோ அணிக்காக நடைபெறவுள்ள போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.