வெங்கடேஷ் ஐயர் அடித்த பந்தை ஒற்றை கையால் பறந்து பிடித்த வீரர்! வைரலாகும் வீடியோ
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்பீரித் ப்ரர் பிடித்த மிரட்டலான கேட்ச் தொடர்பிலான வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் கொல்கத்தா ஓபனிங் வீரர் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ஓடின் ஸ்மித் வீசிய பந்தை அவர் அடித்தார்.
It juggles but holds onto the catch at point. Venkatesh Iyer departs. #IPL2022 #VenkateshIyer #KKRvsPBKS pic.twitter.com/PTihWjwElm
— Amanpreet Singh (@AmanPreet0207) April 1, 2022
பந்தானது நேராக ஹர்பீரித் கைக்கு சென்றது. முதலில் பந்தை ஹர்பீரித் பிடித்த நிலையில் பின்னர் அவர் கையில் இருந்து நழுவியது.
ஆனாலும் விடாமல் முன்னோக்கி பாய்ந்து ஒரு கையால் பந்தை லாவகமாக பிடித்து வெங்கடேஷ் ஐயரை வெளியேற்றினார் ஹர்பீரித்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.