புதுமணத்தம்பதி மேக்ஸ்வெல் - வினி ராமனுக்காக ஆர்.சி.பி அணி வெளியிட்ட வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்
மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்காக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி புதிய கேப்டன் டூப்ளசிஸுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியில் அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார்.
சமீபத்தில் தான் மேக்ஸ்வெல்லுக்கும் - தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமனுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது மேக்ஸ்வெல் - வினி ராமனை வரவேற்க ஆர்சிபி அணி சார்பில் அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டுள்ளது. அணியின் சமூக வலைதளப்பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Checked in for #IPL2022. ✅
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 1, 2022
Making @Gmaxi_32 feel Safe & Sound and at home! ??????#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/fAHOJFZbCO
அதில் அவர்கள் இருவரும் தங்கவுள்ள அறையை காண்பித்துள்ளனர். புது ஜோடிக்காக ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகள், அலங்காரங்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் புகைப்படங்கள், உண்பதற்கு திண்பண்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்துக்கூறினாலும், மற்றொரு புறம் ஆர்சிபி அணியை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
புதுமண தம்பதியின் அறையை இப்படியா அனைவருக்கும் வீடியோ எடுத்து காண்பிப்பது என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.