2023 ஐபிஎல் ஏலம் தொடங்கியது! முதல் ஆளாக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் இவர் தான்
ஐபிஎல் மினி ஏலம் சற்று முன்னர் தொடங்கிய நிலையில் முதல் வீரராக கேன் வில்லியம்சன் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று தொடங்கியது. மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் அவுஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ndtv
அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும், இலங்கையில் இருந்து 23 வீரர்களும், அடக்கமாகும்.
ஐபிஎல் ஏலம் சற்று முன்னர் தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணி கேப்டனும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது.
அதே போல இங்கிலாந்தின் ஹரி ப்ரூக்கை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ.13.25 கோடி என்ற இமாலய விலைக்கு வாங்கியுள்ளது.
இந்திய அணி வீரர் அஜிங்கியா ரஹேனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
Opening bid with the Gujarat Titans for Kane Williamson and he is SOLD for INR 2 Crore to Gujarat Titans #IPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) December 23, 2022