வெற்றி பெற்றது கூட தெரியாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்த தோனி- நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் குஜராத் அணி - சிஎஸ்கே அணி மோதல்
நேற்று முன்தினம் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத இருந்தன. ஆனால், மழை காரணமாக போட்டி ரத்தானது. இதனையடுத்து, நேற்று இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இதனையடுத்து, நேற்று இரவு அகமதாபாத்தில் மீண்டும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. முதலில் துடுப்பாட்டம் செய்த குஜராத் அணி அனல் தெறிக்க பந்தை விளாசின.
இறுதியில் குஜராத் அணி 214 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மைதானத்தில் சிஎஸ்கே அணி இறங்கியது. தோனிக்கு இதுதான் கடைசி ஆட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தோனி வெற்றியோடு திரும்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி வீரர்களும், ரசிகர்களும் ஆர்வத்தில் மிகுந்திருந்தனர்.
கண்ணீருடன் அமர்ந்திருந்த தோனி
ஆனால், நடந்துக் கொண்டிருந்த இறுதிப்போட்டியில் வெற்றி பக்கத்தில் சிஎஸ்கே இருந்தபோது, தோனி டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஒரு சோகம் ஏற்பட்டது. பெவிலியன் நோக்கி தோனி கனத்த முகத்துடன் சென்றார். தோனியின் முக வாடி கடைசி ஓவரை பார்த்துக் கொண்டிருந்தார். மோகித் சர்மா கடைசி ஓவரில் பந்து வீசும்போது, வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது, தோனி நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையை கீழே தொங்கப் போட்டுக்கொண்டிருந்தார்.
கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அப்போது ஜெயித்தது கூட தெரியாமல் தோனி தலை குனிந்திருந்தார். மற்றவர்கள் அவரின் தோளை தட்டி சிஎஸ்கே ஜெயித்துவிட்டது என்று கூறியபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பு வந்ததாக தெரிகிறது. கடைசி பந்தை அவர் பார்த்தாரா என வீடியோவில் தெரியவில்லை.
உடனே மகிழ்ச்சியில் துள்ளி குதித்த தோனி மைதானத்தில் ஜடேஜாவை அப்படியே கட்டிப்பிடித்து தூக்கி கொண்டாடினார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து உற்சாகத்தில் கொண்டாடினர். 5 வது முறையாக சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கியது என்பது சிஎஸ்கே ரசிகர்களால் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும்.
Tears in Dhoni eyes make me very emotional :'( ? pic.twitter.com/BGFdEOYC6R
— M̷ɾ. ? (@__Dhinu__) May 30, 2023
Thala is emotional ?? pic.twitter.com/t63fbvUOJp
— Dhoni Army TN™ (@DhoniArmyTN) May 30, 2023